2 கவலையான விஷயம்.. தமிழ்நாட்டிற்கு சென்னை ரெய்ன்ஸ் எச்சரிக்கை.. சாட்டிலைட் இமேஜ் சொல்வது என்ன? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வங்கக்கடல் தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழை நிலவரம் எப்படி இருக்கும் என்று சென்னை ரெய்ன்ஸ் கணித்துள்ளது.

வங்கக்கடலில் இன்று மூன்றாவது காற்றழுத்தி தாழ்வு பகுதி உருவாக உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலிமைபெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கிறது. இன்று இரவுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இலங்கை அருகே கடல் பகுதியில் இது உருவாகும்.

இந்த நிலையில்புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகுறித்து தனியார் வானிலை ஆய்வு மையமான சென்னை ரெய்ன்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. chennairains.com பக்கத்திலும் அவர்களின் ட்வீட்டர் பக்கத்திலும் இது தொடர்பான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

வருகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 7 மாவட்டங்களில் இன்று கன மழை கொட்டும்- சென்னை வானிலை மையம்வருகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 7 மாவட்டங்களில் இன்று கன மழை கொட்டும்- சென்னை வானிலை மையம்

மாற்றம்

அதில், கடந்த இரண்டு நாட்கள் வடதமிழ்நாட்டில் வரவேற்க கூடிய மாற்றங்கள் ஏற்பட்டன. வறண்ட காற்று காரணமாக சென்னை மற்றும் வடதமிழ்நாட்டில் வானிலை நன்றாக இருந்தது. சென்னையில் கடந்த 48 மணி நேரமாக பெரிய அளவில் எங்கும் மழை பொழியவில்லை. அடுத்த 24-36 மணி நேரத்தில் சென்னையில் மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இப்போது அடிக்கும் வெயிலால் பல இடங்களில் தேங்கி இருக்கும் தண்ணீர் வெளியேற வசதியாக இருக்கும்.

சாட்டிலைட் இமேஜ்கள்படி பார்த்தால் இன்னும் சற்று நேரத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் கிழக்கு இலங்கை கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவித்துவிடும். இலங்கையின் மேற்கு தென்மேற்கு திசையில் இது உருவாகும். பின்னர் சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதி வழியாக நகர்ந்து தென் தமிழ்நாட்டை இன்று வந்தடையும். இதனால் கடலோர தமிழ்நாட்டில் காற்று குவித்தல் ஏற்படும்.

கவலை

அடுத்த சில நாட்கள் கடலோர தமிழ்நாட்டிற்கு இரண்டு விதமான கவலைகளை கொடுக்கிறது. முதல் கவலை – காற்று குவித்தல் காரணமாக கடலோர தமிழ்நாட்டில் கனமழை பெய்யும். அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை பெய்யும். சென்னை முதல் டெல்டா வரை இந்த மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. லோக்கல் வானிலை மற்றும் 24-48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதை பொறுத்து இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.

மன்னார் வளைகுடா

2வது கவலைதான் மிகப்பெரியது. காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா நோக்கி இன்னும் 2 நாட்களில் நகரும். இந்த நேரத்தில் நிலப்பரப்பு சூழ்நிலை காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக நகராமல் ஒரு இடத்தில் நிற்கும் நிலை ஏற்படும் அல்லது மிக மெதுவாக நகரும் நிலை ஏற்படும். இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 50-100 கிமீ தூரம் கொண்ட பரப்பில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தீவிர கனமழை பெய்யும். இங்கேயே காற்று சுற்றுவதால் பல மணி நேரத்திற்கு தீவிர கனமழை பெய்யும்.

பல மணி நேரத்திற்கு தீவிர கனமழை

இதனால் இன்னொரு பக்க தென் உள் தமிழ்நாட்டிலும் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. முதல் இரண்டு தாழ்வு நிலைகளை போல இல்லாமல். இந்த தாழ்வு நிலை கொஞ்சம் வடதமிழ்நாட்டில் தென் பகுதிகளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பெண்ணை, பாலாறு, காவேரி பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இன்று எங்கே

இன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், தென் தமிழகத்தில் பல இடங்களில் மழை தொடர்வதைக் இன்று காண முடியும். டெல்டா பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை முதல் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வெயில் அடிக்கும், என்று சென்னை ரெய்ன்ஸ் வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Rain: 2 Worries for the state due to low pressure says Chennai rains in their post.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-rain-2-worries-for-the-state-due-to-low-pressure-says-chennai-rains-440142.html