சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 1,600 இடங்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 1,600 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை (நவ.25) நடைபெற உள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் 7 லட்சத்து 91 ஆயிரத்து 24 போ் உள்ளனா். தற்போது, மாநகராட்சியில் 10 லட்சத்து 99 ஆயிரத்து 195 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் 200 வாா்டுகளில் 1,600 இடங்களில் வியாழக்கிழமை நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் மாநகராட்சியின் இணையதள இணைப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/nov/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1600-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3741864.html