தூத்துக்குடியை அடுத்து.. இப்போ சென்னை டேர்ன்.. இதுதான் ரொம்ப முக்கியம்.. சென்னை ரெய்ன்ஸ் வார்னிங் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தூத்துக்குடியில் நேற்று கனமழை பெய்தது போல இன்று வடதமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டை இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்கிய நிலையில் மூன்றாவது தாழ்வு பகுதி இந்த வாரம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தாழ்வு பகுதியாக மாறாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மாறாக இது காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நீடிக்கும். இருப்பினும் தமிழ்நாட்டில் கடலோர மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் கன மழை.. நெல்லை, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!தொடரும் கன மழை.. நெல்லை, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

எங்கே

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரே இடத்தில் லாக் ஆன நிலையில் நேற்று தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து சென்னை ரெயின்ஸ் இணைய பக்கம் விளக்கமாக போஸ்ட் செய்துள்ளது. அதில், இதற்கு முன் வந்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலங்கள் எப்படி சில இடங்களில் மிக கனமழையை கொடுத்ததோ அதேபோல் இந்த முறையும் தூத்துக்குடியில் மிக கனமழை பெய்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று பல பகுதிகளில் சில மணி நேரங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் சில மணி நேரத்தில் 20 செமீ மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த 7ம் தேதியும், டெல்டா மாவட்டங்களில் அடைந்த 10ம் தேதியும், குமரி, நெல்லை, தென்காசியில் கடந்த 13, 14 திதிகளிலும், பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரத்தில் கடந்த 18ம் தேதியும் இதேபோல்தான் ஒரு சில மணி நேரங்களில் மிக கனமழை பதிவானது.

இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை மையம் தற்போது இலங்கை அருகே வங்கக்கடலில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை தாழ்வு பகுதியாக உருவாகாது என்று அறிவித்துள்ளது. மாறாக தென் சீனாவில் இருந்து வங்கக்கடல் நோக்கி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த சில நாட்களில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இப்போது வங்கக்கடலில் நிலவுவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ, தாழ்வு பகுதியோ எதுவாக இருந்தாலும் கனமழை கண்டிப்பாக பெய்யும்.

பெயர் முக்கியம் இல்லை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக இருந்தாலும் கூட அதன் பலம் காரணமாக அதிக மழை பெய்ய போகிறது. அதன் வலிமைதான் மழை அளவை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானது. இதற்கு முன் சில புயல்கள் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் சென்றதை பார்த்து இருக்கிறோம். 92பி போன்ற தாழ்வு பகுதிகள் மிக அதிக மழையை கொடுத்ததை பார்த்து இருக்கிறோம். அப்படித்தான் இப்போதும்.

சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியில் அதிக கனமழையை ஏற்படுத்தும் கூறுகள் இருக்கிறதா என்பதை சோதிப்பதே முக்கியம். இந்த வடகிழக்கு பருவமழை சீசனில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் இதேபோன்ற மிக கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. நேற்று தூத்துக்குடியில் பெய்த கனமழையும் இதற்கு விதி விலக்கு கிடையாது. அதேபோல் இன்று வட தமிழ்நாட்டிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிக கனமழை.பெய்யும்

இதனால் இன்று மாலையும் இரவும் சென்னை மற்றும் கடலூர் இடையே சில இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. சரியாக எந்த இடத்தில் இந்த மிக கனமழை பெய்யும் என்பதை உறுதியாக சொல்ல முடியும். தூத்துக்குடியில் மழை பெய்தது போல இது சென்னைக்கான டர்ன். அதேபோல் Dry line thunderstorm காரணமாக இன்றும் நாளையும் வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

அதிகரிக்கும்

சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் இன்று மாலையில் இருந்து மழை அளவு அதிகரிக்கும். நாளை வரை இது தொடரும். இதனால் மழை அளவை பொறுத்து சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புகளும் உள்ளன, என்று சென்னை ரெய்ன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

English summary
Weather Report: North Tamilnadu and Chennai to get heavy rains says Chennai Rains site.

Source: https://tamil.oneindia.com/news/chennai/weather-report-north-tamilnadu-and-chennai-to-get-heavy-rains-says-chennai-rains-440364.html