தெரு வியாபாரிகள் எங்கெல்லாம் வியாபாரம் செய்யலாம்.. அறிக்கை கேட்கிறது சென்னை ஹைகோர்ட் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தெரு வியாபாரிகள் முறைப்படுத்தும் விதிகளை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தெரு வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டப்படி சென்னையில் வியாபாரம் செய்யக்கூடிய இடங்கள் எவை? எனவும் கேட்டு, ஒரு மாதத்தில் அறிவிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலை வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்காக 2014ம் ஆண்டு ‘சாலை வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல்’ சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன்மூலம் வியாபாரிகளுக்காகவே அடையாள அட்டை வழங்குதல், அவர்களின் இடத்திற்கான உரிமம் வழங்குதல், சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாத்தல், வியாபாரிகள் அன்றாடும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து முறையிட ஓய்வுபெற்ற நீதித் துறை அலுவலர்கள் தலைமையில் குழு அமைத்தல், காப்பீட்டுத் திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதால், தெரு வியாபாரிகளை முறைப்படுத்துவது தொடர்பாக சாலை வியாபாரிகள் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சிங்காரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.. மேலும் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்டத்தையும், விதிகளையும் அமல்படுத்தவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

'திடீர் திருப்பம்..' வாணியம்பாடி கொலை வழக்கு.. கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்‘திடீர் திருப்பம்..’ வாணியம்பாடி கொலை வழக்கு.. கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தெரு வியாபாரிகள் சட்டப்படி சென்னையில் எங்கு வியாபாரம் செய்யலாம் என்றும், எங்கெல்லாம் வியாபாரம் செய்யக் கூடாது என்றும் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வியாபாரம் செய்யக் கூடிய பகுதிகள், வியாபாரம் செய்யக் கூடாத பகுதிகளை ஒரு மாதத்தில் அறிவிக்க வேண்டும் எனக் கூறி, அந்த நடைமுறைகளை முடிக்க ஏதுவாக வழக்கை ஒரு மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த சட்டம் முழுமையான அமல்படுத்தப்படாததால் சாலை வியாபாரிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.. மேலும், சட்டம் முழுமையான அமல்படுத்தப்படும் வரை சாலைக் கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தவோ, வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu hawkers safty bill Case issue in Chennai High Court

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-hawkers-safty-bill-case-issue-in-chennai-high-court-440771.html