மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் – காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இரு சக்கர வாகன பேரணி தொடக்கம் : – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

Published : 01 Dec 2021 06:39 am

Updated : 01 Dec 2021 06:39 am

 

Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM

குன்னூர்

நீலகிரி மாவட்டம் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் 263-வது எழுச்சி தினத்தையொட்டி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இரு சக்கர வாகன பேரணி தொடங்கியது.

குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ முகாமிலிருந்து பேரணியை ஓய்வு பெற்ற பிரிகேடியர் அஜித் சிங் தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்றவர்கள் வெலிங்டனிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றடைவார்கள். கொல்கத்தா, ஜாம் நகர், சென்னை, செகந்திராபாத் மற்றும் இந்தியாவின் பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த மெட்ராஸ்ரெஜிமென்ட்டின் பட்டாலியன்களைச் சேர்ந்த இரு சக்கர வாகனஓட்டுநர்கள் பேரணியில் பங்கேற்பார்கள். அவர்கள் டிசம்பர் 4-ம் தேதி திருவனந்தபுரத்தில் ‘இந்தியராணுவத்தின் பழமையான படைப்பிரிவின் 263-வது எழுச்சி நாள்’ அன்று ஒன்று கூடுவார்கள்.

அன்று நடைபெறும் விழாவில், 1971-ல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரின் போது வீர சாகச விருது பெற்றவர்கள்கவுரவிக்கப் படுவர். இது இந்தியராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப்பிரிவின் முதன்முறை மற்றும் தனித்துவ மான முயற்சியாகும் என ராணுவத்தினர் தெரிவித்தனர்.

Source: https://www.hindutamil.in/news/todays-paper/regional02/742557-.html