சென்னை NIE நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… கல்வி தகுதி, சம்பளம் & வயது வரம்பை சரிபார்க்கவும்.. – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு.
  • நேர்காணல் நடைபெறும் தேதி டிசம்பர் 21, 2021 ஆகும்.

சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள DEO, விஞ்ஞானி, தொழில்நுட்ப அதிகாரி ஆகிய பதவிகளுக்கு பணியாளர்களை நியமிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nie.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு சென்று தகுதி, சம்பளம் மற்றும் வயது வரம்பு ஆகியவற்றை சரிபார்த்து, டிசம்பர் 21 ஆம் தேதி அலுவலக நேர்காணலுக்கு நேரடியாக செல்ல வேண்டும்.

வேலைவாய்ப்புக்காக முழு விவரம்:

நிறுவனத்தின் பெயர் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE-National Institute of Epidemiology).
பதவியின் பெயர் DEO, Scientist, Technical officer.
காலியிடங்களின் எண்ணிக்கை 05.
வேலை வகை மத்திய அரசு வேலை.
பணியிடம் சென்னை.
விண்ணப்பிக்கும் முறை நேரடியாக செல்லவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி 21 டிசம்பர் 2021
அதிகாரப்பூர்வ இணையதளம் www.nie.gov.in
அலுவலக முகவரி National Institute of Epidemiology, R-127, Second Main Road, Tamil Nadu Housing Board, Ayapakkam, Chennai-600077.

கவித்தகுதி:

விண்ணப்பதாரரின் கல்வித்தகுதியானது பதவியை பொறுத்து மாறுபடும்.

Project Scientist C: கம்ப்யூட்டர் சயின்ஸ்/IT இன்ஜினியரிங் பிரிவில் 1st கிளாஸ் BE/BTech தேர்ச்சியுடன் தொடர்புடைய பாடத்தில் 6 வருட R&D/ஆசிரியர் அனுபவம் இருக்க வேண்டும். அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்/IT-யில் 2nd கிளாஸ் முதுகலை பட்டம் + பிஎச்டி 4 ஆண்டுகள் R&D/ உடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் சம்பந்தப்பட்ட பாடத்தில் கற்பித்தல் அனுபவம் இருக்க வேண்டும்.

Project Scientist B: 1st கிளாசில் BE/BTech கம்ப்யூட்டர் சயின்ஸ் / IT இன்ஜினியரிங் மற்றும் தொடர்புடைய பாடத்தில் 4 வருட R&D / கற்பித்தல் அனுபவம் இருக்க வேண்டும். அல்லது சம்மந்தப்பட்ட பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்/IT இன்ஜினியரிங்கில் 2 ஆம் வகுப்பில் முதுகலை பட்டம் + PhD பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Project Technical officer: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புள்ளியியல்/பயோஸ்டாடிஸ்டிக்ஸ்/கணிதத்தில் பட்டதாரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஐந்தாண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் இருக்க வேண்டும். அல்லது புள்ளியியல்/பயோஸ்டாடிஸ்டிக்ஸ்/கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Project Scientist C (Medical): MBBS பட்டம் மற்றும் MBBS பட்டப்படிப்புக்குப் பிறகு சமூக மருத்துவம், தடுப்பு மற்றும் சமூக மருத்துவம், பொது சுகாதாரம், சமூக ஆரோக்கியம் ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பு (MD/DNB) மற்றும் ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். அல்லது MBBS பட்டப்படிப்புக்குப் பிறகு பொது சுகாதாரப் பாடங்களில் முதுகலை டிப்ளமோ/ MPH/MAE பட்டத்துடன், இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

Project Data Entry Operator: அங்கீகரிக்கப்பட்ட குழுவிலிருந்து இடைநிலை அல்லது 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் வேக சோதனை (speed test) மூலம் ஒரு மணி நேரத்திற்கு 8000 வார்த்தைகளுக்கு குறையாமல் தட்டச்சு செய்ய வேண்டும்.

வயது வரம்பு மற்றும் சம்பள விவரம்:

பதவிகளை பொறுத்து வயதுவரம்பில் மாற்றம் இருக்கும். விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 30 முதல், அதிகபட்சமாக 40-க்குள் இருக்க வேண்டும். அரசாங்க அறிவிப்பின்படி, SC/ST மற்றும் OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். சம்பளம் குறித்து பேசுகையில் பதவிக்கு ஏற்றார் போல மாத வருமானமும் மாறுபடும். குறைந்தபட்சமாக ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.67,000 வரை சம்பளம் கிடைக்கும்.

விண்ணப்ப கட்டணம்:

மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை. விண்ணப்பத்தை ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் அதாவது, இங்கே கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை தவறு இல்லாமல் நிரப்பவும். தேவையான ஆவணங்களை (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) இணைத்து, வரும் 21 ஆம் தேதி அலுவலக முகவரிக்கு நேரடியாக நேர்முகத்தேர்வுக்கு செல்லவும்.

Source: https://tamil.samayam.com/jobs/central-jobs/nie-chennai-recruitment-apply-for-5-project-scientist-job-vacancy-check-full-details/articleshow/88208623.cms