அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை

டுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், “தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அவற்றில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களும் உள்ளிட்டவை ஆகும்.

இந்த மழை லேசானது முதல் மிதமானது வரை பெய்ய வாய்ப்புள்ளது.  அதாவது வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://patrikai.com/rain-may-occur-in-12-districts-of-tn-including-chennai-in-next-3-hours/