தீப்பெட்டி இருக்கா அவசரமாக கேட்ட சன்னி லியோன்.. பரபரப்பான சென்னை ஏர்போர்ட்.. 500 டிப்ஸ் வேற! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நடிகை சன்னி லியோன் தரையிறங்கிய போது நடந்த சம்பவம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

நடிகை சன்னி லியோன் உலக அளவில் பிரபலமான நடிகை. தொடக்கத்தில் ஆபாச படங்களில் நடித்தவர் அதன் பின் முழுக்க பாலிவுட் படங்கள் பக்கம் சென்றார். திருமணம் செய்து, குழந்தைகளை தத்தெடுத்து இவர் வாழ்ந்து வருகிறார்.

சில தமிழ் படங்களில் பாடல் காட்சிகளில் சன்னி லியோன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு இன்று சன்னி லியோன் வந்தார்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்

சன்னி லியோன்

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சன்னி லியோன் அங்கு இறங்கியவுடன் லைட்டர் கேட்டு இருக்கிறார். விமானத்தில் லைட்டர் அனுமதி இல்லை என்பதால் அவர் லைட்டர் கொண்டு வரவில்லை. அதேபோல் சென்னையில் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த டிரைவரிடமும் லைட்டர் இல்லை.

லைட்டர்

இதையடுத்து காருக்குள் சென்றவர், அங்கு இருந்து விமான நிலைய அதிகாரியிடம் லைட்டர் கேட்டுள்ளார். அதற்கு லைட்டர் இங்கு இல்லை என்று கூறிய அந்த அதிகாரி வேகமாக ஓடி சென்று தீ பெட்டியை தேடி உள்ளார். சன்னி லியோன் கேட்டதும் வேகமாக விமான நிலையத்தின் பல்வேறு அரங்குகளுக்கு சென்ற அந்த அதிகாரி, யாரையோ பிடித்து தீ பெட்டி இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.

தீ பெட்டி

கடைசியாக அங்கு இருந்த காவல் அதிகாரி ஒருவரிடம் தீ பெட்டி இருந்துள்ளது. இதை வாங்கிக்கொண்ட அந்த அதிகாரி சன்னி லியோனிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட சன்னி லியோன் அந்த அதிகாரிக்கு நன்றி தெரிவித்தார். அதோடு அவருக்கு 500 ரூபாய் பணமும் கொடுத்தார்.

வைரல்

500 ரூபாயை வாங்கிக்கொண்ட அந்த அதிகாரி என்ன ஒரு தீப்பெட்டிக்கு இவ்வளவு ரூபாயா என்று வியந்து போனார். தீ பெட்டியை வாங்கிக்கொண்ட சன்னி லியோன் அங்கிருந்து உடனே காரில் பறந்து சென்றார். சென்னை விமான நிலையத்தில் சன்னி லியோன் தீ பெட்டி கேட்ட இந்த சம்பவம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

English summary
Actress Sunny Leone asks for a lighter in Chennai airport to an airport official.

Source: https://tamil.oneindia.com/news/chennai/sunny-leone-asks-for-lighter-in-chennai-airport-442010.html