சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் வரும் 15, 16, 17, 19 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்ட மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16127), வரும் 15, 16, 17, 19 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயில் எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/12/14081619/Change-in-ChennaiGuruvayur-Express-train-service.vpf