தேங்கி நிற்கும் மழை நீர்: நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் சென்னை புறநகர் பகுதி மக்கள் – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • பூர்த்தி அடையாத மழைநீர் கால்வாய் பணிகள்
  • தேங்கி நிற்கும் மழை நீர்
  • நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் சென்னையின் புறநகர் பகுதி மக்கள்

சென்னையில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அதிகமாக உள்ளது. இதுவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 100 செ.மீ. க்கும் அதிகமான மழை கொட்டி தீர்த்துள்ளது.

இதனால், திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேற, வடிகால் வசதிகள் கிடையாது. கழிவுநீர் பாதுகாப்பாக வெளியேற, பாதாள சாக்கடை வசதிகள் இல்லை. இதன் காரணமாக வாரக்கணக்கில் வெள்ளம் தேங்கியுள்ளதால் புறநகரில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நோய்த் தொற்றினால் உடல் உபாதைகள் உட்பட கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.

வெள்ளம் இன்று வடியும், நாளை வடியும் என, காத்திருந்த புறநகர் பகுதிவாசிகள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறவும், வெள்ள பாதிப்பு இல்லாத பகுதிகளில் வீடு வாங்கவும் முடிவு செய்து உள்ளனர்.

குறிப்பாக இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் தனியார் நிறுவனங்களைச் சார்ந்து பணியில் இருக்கிறார்கள் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் இந்த நீரினால் கடுமையான உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் தனியார் நிறுவன ஊழியர்கள் விடுமுறை கிடைக்காமல் வேறுவழியின்றி பணிக்குச் செல்லும் நிலை உள்ளது என வேதனை அடைந்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் விடுதலை குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுப்பார்; அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் பேட்டி!
முடிச்சூர் மகாலட்சுமி நகர் வரதராஜபுரம் பகுதி அடையாறு ஆற்றுப்படுகையில் இருந்து 3 அடி வரை தாழ்வான பகுதியாக உள்ளது. மேலும், மழைநீர் வடிகால்களும் 20 சதவீதம் கூட அமைக்கப்படாத காரணத்தினால் ஆண்டுதோறும் மழை காலங்களில் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் போது வெள்ளத்தில் சிக்கி முடிச்சூர், பழைய பெருங்களத்துார், தாம்பரம், சி.டி.ஓ., காலனி, அனகாபுத்துார், திருநீர்மலை, பொழிச்சலுார், கவுல்பஜார், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கின்றன.

பல பகுதிகளில் மழைநீர் கால்வாய் இருக்கும் இடம் தெரியாமல் மண் மூடி இருக்கிறது. மேலும் முடிச்சூர் சாலை தொடங்கும் பகுதி மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில்மேற்கு தாம்பரத்தில்பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருக்கெடுத்து வரும் மழைவெள்ளம் முடிச்சூர் பகுதியை மூழ்க வைக்கும் அளவில் தேங்கி விடுகின்றன.

மழை வெள்ளத்தை சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் கால்வாய்வழியாகத் தான்பாப்பான் கால்வாய் மூலம் அடையாற்றில் வடிந்து செல்ல வகை செய்யப்பட்டுள்ளது.

தாழ்வான முடிச்சூர்பகுதிக்கு வரும் மொத்த வெள்ளத்தையும் வேறு பகுதிக்குத் திருப்ப மாற்று ஏற்பாடு இல்லை.எனவே முடிச்சூர்சாலையோர வடிகால் கால்வாய்களை மேலும் அகலப்படுத்தி, ஆழப்படுத்தி கால்வாய்களை விரைவில் சீரமைத்தால் மட்டுமேமுடிச்சூர் பகுதி வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுக்க முடியும் .
imageசென்னை புத்தகக் கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
இதனால் மழைநீர் கால்வாய்களை ஆழப்படுத்தி அகலப்படுத்தி எதிர்காலத்தில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/stagnant-rainwater-people-in-the-suburbs-of-chennai-who-are-susceptible-to-disease/articleshow/88271577.cms