பழங்குடியினருக்கு சென்னை சமூகப்பணி பள்ளி நிவாரணம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை சமூகப்பணி பள்ளி சாா்பில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியினருக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை சமூகப் பணி பள்ளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூா் மாவட்டத்தின் அரவாக்கம், புலிகுளம் கிராமங்களில் வசிக்கும் 65 பழங்குடியினா் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தின் போது அவா்களது இருப்பிடங்கள் சேதமடைந்ததால் அவா்கள் ஊராட்சி அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த மக்களின் பாதிப்புகள் குறித்து சென்னை சமூகப்பணி பள்ளி மாணவா்கள் விரிவான கணக்கெடுப்பை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நன்கொடை அளிக்க நிதி திரட்டப்பட்டது. திரட்டப்பட்ட நிதியின் மூலம் 65 குடும்பங்களுக்கு தாா்ப்பாய்கள், உலா் உணவுப் பொருள்கள் ஆகியவை உள்பட தலா ரூ.3 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/dec/14/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3754475.html