சென்னை: மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பு கடன் முகாம் இன்று தொடக்கம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் சிறப்பு கடன் முகாம்களை நடத்தி, அதிக கடன் வழங்கவும், அரசுத் திட்டங்களை செயல்படுத்தவும் வங்கி திட்டமிட்டு உள்ளது.

சென்னை, 

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி கடந்த 1930-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 91 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு சென்னையில் 71 கிளைகள் உள்ளன. இந்த வங்கி குறைந்த வட்டியில் மக்களுக்கு நகைக்கடனை வழங்குகிறது.

அதுமட்டுமல்லாமல், மகளிர் சுய உதவிக் குழு கடன், மகளிர் வளர்ச்சிக் கடன், பணிபுரியும் மகளிர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறுதொழில் மேம்பாட்டுக் கடன், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.

சென்னையில் சிறப்பு கடன் முகாம்களை நடத்தி, அதிக கடன் வழங்கவும், அரசுத் திட்டங்களை செயல்படுத்தவும் வங்கி திட்டமிட்டு உள்ளது. முதல்கட்டமாக 8-ந் தேதியன்று பாண்டிபஜார் கிளையில் சிறப்பு கடன் முகாம் நடத்தப்பட்டு 72 வாடிக்கையாளருக்கு ரூ.34.51 லட்சம் அளவிற்கு பல வகையான கடன்கள் வழங்கப்பட்டன.

அடுத்தகட்டமாக, மேலும் சில கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, 15-ந் தேதி (இன்று) ஆதம்பாக்கம் கிளை; 22-ந் தேதி ஆர்.வி.நகர் கிளை; 29-ந் தேதி அண்ணாநகர் 2-வது அவன்யூ; ஜனவரி 5-ந் தேதி சூளைமேடு; 12-ந் தேதி எம்.எம்.டி.ஏ. காலனி; 19-ந் தேதி ஜாம்பஜார்; 27-ந் தேதி அசோக்நகர்;

பிப்ரவரி 2-ந் தேதி கொளத்தூர் கிளை; 9-ந் தேதி பிராட்வே (தலைமை அலுவலகம்) ஆகிய கிளைகளில் கடன் முகாம்கள் நடக்க உள்ளன. இந்த முகாம் தொடர்பான விவரங்களை 7550094090 என்ற போன் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

இந்தத் தகவலை சென்னை மத்திய கூட்டுறவு வங்கி வெளியிட்டு உள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/12/15081914/Chennai-Central-Cooperative-Bank-Loan-mela-in-Chennai.vpf