சென்னை புகரில் 2 இடங்களில்மேம்பாலங்களுக்கு அடிக்கல் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை புக ரில் இரண்டு இடங்களில் புதிய மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு இந்தப் பாலங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

கூடுவாஞ்சேரி – சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலமும், வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணிகளும் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு, புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். அப்போது பேசிய அவா், கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கும் பணி 30 மாதங்களுக்குள் நிறைவடையும். இந்தப் பணி நிறைவடைந்தால், ஒரகடம் தொழிற்பேட்டை, ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

மேலும், வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணி 18 மாதங்களில் முடிக்கப்படும். இந்தப் பணி நிறைவடைந்தால் படப்பை, ஒரகடம் செல்லும் வாகனங்களுக்கு உதவியாக இருக்கும் என்று அமைச்சா் வேலு பேசினாா். இந்த விழாவில், அமைச்சா் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/dec/16/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3755474.html