தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது ஓமிக்ரான் கொரோனா.. சென்னையில் உள்ளவருக்கு பாதிப்பு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது. சென்னையை சேர்ந்தவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 70க்கும் மேற்பட்ட கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக ஓமிக்ரான் கருதப்படுகிறது.

இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்தியாவில் வெறும் 2 ஓமிக்ரான் கேஸ்கள் மட்டுமே இருந்தது. கர்நாடகாவில் இரண்டு கேஸ்களும் பதிவானது.

மாநிலங்கள் விவரம்

ஆனால் அதன்பின் சரசரவென அதிகரித்து கேஸ்கள் தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் 32 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு நினைக்க முடியாத வேகத்தில் ஓமிக்ரான் கொரோனா பரவ தொடங்கி உள்ளது.

இந்தியா ஓமிக்ரான்

இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் பரவி உள்ள மாநிலங்கள்

மகாராஷ்டிரா: 32

ராஜஸ்தான்: 17

குஜராத்: 4

கர்நாடகா: 3

கேரளா: 5

ஆந்திரா: 1

டெல்லி: 6

சண்டிகர்: 1

மேற்கு வங்கம்: 1

தெலுங்கானா : 2

தமிழ்நாடு: 1

தமிழ்நாடு கேஸ்

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த நகருக்கு ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தோஹா வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு ஜீன் மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு ஓமிக்ரான் இருப்பது உறுதியாகி உள்ளது.

சிகிச்சை

அவருக்கு லேசான ஓமிக்ரான் கொரோனா பாதிப்பே உள்ளது. அவர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் தொடர்பில் இருந்த சென்னையை சேர்ந்த 8 பேர் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டள்ளனர்.

English summary
Coronavirus: Tamilnadu gets its first Omicron variant case

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-tamilnadu-gets-its-first-omicron-variant-case-442275.html