அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது! சென்னை ரயில் சேவை பாதிப்பு… – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை: அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது. இதன் காரணமாக சென்னைக்கு வரும் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுளள்து. வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் வேறு டிராக்கில் மாற்றப்பட்டு உள்ளதால், அரக்கோணம், சென்னை புறநகர் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் மற்றும் மோசூர் பகுதி இடையே, சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானனது. சென்னையில் இருந்து ரேணிகுண்டா செல்லும் 22 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக சென்னை மற்றும் அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தடம் புரண்ட சரக்கு ரயிலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ன்று சென்னை- அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரயில் ரத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Source: https://patrikai.com/goods-train-derails-near-arakkonam-chennai-train-services-affected/