கிறிஸ்துமஸ் வரை ஜில்ஜில்.. குளிர் அதிகரிக்க போகிறது.. எங்கு எல்லாம் தெரியுமா?-சென்னை ரெயின்ஸ் Report – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கிறிஸ்துமஸ் வரை குளிர் நீடிக்கும் என்று சென்னை ரெயின்ஸ் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குளிர் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழை மொத்தமாக நின்று போய் குளிர் வாட்டி எடுக்க தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த சில நாட்களில் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும் என்று ஏற்கனவே சென்னை வானிலை மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நடுங்குகிறது டெல்லி.. காலையிலேயே 3.2 டிகிரி குளிர்.. கொட்டும் பனியில் தவிக்கும் வடமாநில மக்கள்..! நடுங்குகிறது டெல்லி.. காலையிலேயே 3.2 டிகிரி குளிர்.. கொட்டும் பனியில் தவிக்கும் வடமாநில மக்கள்..!

அறிக்கை

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 1 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறையும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படியே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது.

சென்னை ரெயின்ஸ்

இந்த நிலையில் தனியார் வானிலை நிறுவனமான சென்னை ரெயின்ஸ் அமைப்பு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குளிர் அதிகரிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை ரெயின்ஸ் வெளியிட்டுள்ள கணிப்புப்படி, தமிழ்நாடு வட மாவட்டங்களில் இரவு நேரங்களில் குளிர் இன்னும் அதிகரிக்கும்.

சென்னை வானிலை

இயல்பை விட 3/4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை குறைவாக இருக்கும். அதேபோல் சென்னையிலும் அதை சுற்றி உள்ள புறநகரப்பகுதிகளிலும் வெப்பநிலை 20 டிகிரி செல்ஸியசுக்கு குறைவாக இருக்கும். தென் தமிழ்நாட்டில் குளிர் அதிகரிக்கும், வறண்ட வானிலையே இங்கு காணப்படும்.

தமிழ்நாடு வானிலை குளிர்

குளிர்ச்சியான வறண்ட வானிலை தென் தமிழ்நாட்டில் காணப்படும். வட உள் மாவட்டங்கள், வடகிழக்கு மாவட்டங்களில் குளிர் அதிகமாக இருக்கும். 15-17 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை இங்கு செல்லும். சென்னையில் 18 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை செல்லும், கிறிஸ்துமஸ் வரை இந்த வெப்பநிலை நீடிக்கலாம் என்று சென்னை ரெயின்ஸ் கூறியுள்ளது.Credit: Chennairains.com

English summary
Tamilnadu Winter: Temperature in the state may decrease more says Chennai rains report.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-winter-temperature-in-the-state-may-decrease-more-says-chennai-rains-442786.html