தூய்மை சென்னை: தொழில்நுட்ப ஆலோசனை திட்டங்கள் வரவேற்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

சென்னை மாநகரை தூய்மையாகப் பராமரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைத் திட்டங்கள் வரவேற்கப்படுவதுடன், சிறந்த திட்டத்துக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சம் அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.

சென்னை மாநகரை தூய்மையான நகராகப் பராமரிக்கும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்ட அமைப்பு ஆகியவை இணைந்து கழிவுகள் மேலாண்மை, நெகிழி கழிவு மேலாண்மை ஆகியவை குறித்த தொழில்நுட்ப ஆலோசனைத் திட்டங்களை வரவேற்கின்றன.

இதில், சிறந்த திட்டத்துக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.2.50 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 1.50 லட்சம், நான்காம் பரிசாக ரூ. 1 லட்சம், ஐந்தாம் பரிசாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்படும். திட்டங்களை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள்  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாநகராட்சி ஆணையா் அலுவலகம் தெரிவித்தது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/dec/21/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3759061.html