டபுளாக உயர்ந்த கேரட் விலை… சென்னை மக்கள் அப்செட்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

சென்ற மாதம் முழுவதும் கனமழை காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. எனினும் கடந்த சில வாரங்களில் இயல்பு நிலை திரும்பியதால் சென்னை வாசிகள் நிம்மதியடைந்தனர். தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட முக்கியமான காய்கறிகளின் விலை குறைவாகவே உள்ளது. ஆனால், அதிர்ச்சி தரும் விதமாக, இன்று கேரட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (டிசம்பர் 22) ஒரு கிலோ தக்காளி விலை 35 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேநேரம், வெங்காயம் விலை 40 ரூபாயிலிருந்து 38 ரூபாயாகக் குறைந்துள்ளது. கேரட் விலை இன்று 80 ரூபாய்க்குச் சென்றுள்ளது. நேற்றுதான் 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அவரைக்காய் விலை 80 ரூபாயாகவும், பீன்ஸ் விலை 45 ரூபாயாகவும் உள்ளது.

உடனே நகைக் கடைக்கு கிளம்புங்க… நல்ல வாய்ப்பு!

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி – ரூ.40
வெங்காயம் – ரூ.38
அவரைக்காய் – ரூ.80
பீன்ஸ் – 45
பீட்ரூட் – ரூ.75
வெண்டைக்காய் – ரூ.80
நூக்கல் – ரூ.60
உருளைக் கிழங்கு – ரூ.30
முள்ளங்கி – ரூ.20
புடலங்காய் – ரூ.60
சுரைக்காய் – ரூ.50
பாகற்காய் – ரூ.50
கத்தரிக்காய் – ரூ.60
குடை மிளகாய் – ரூ.70
கேரட் – ரூ.80
காளிபிளவர் – ரூ.60
சவுசவு – ரூ.25
தேங்காய் – ரூ.30
வெள்ளரிக்காய் – ரூ.12
முருங்கைக்காய் – ரூ.200
இஞ்சி – ரூ.60
பச்சை மிளகாய் – ரூ.50
கோவைக்காய் – ரூ.45

Source: https://tamil.samayam.com/business/business-news/one-kilo-carrot-price-shoots-up-to-80-rupees-in-chennai/articleshow/88427606.cms