ரூ.60 ஆயிரம் மத்திய அரசில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? – தினமணி

சென்னைச் செய்திகள்

 
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: CSIR MADRAS COMPLEX

பணி: Technical Assistant – 01 
சம்பளம்: மாதம் ரூ.60,648 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Technician – 01 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.33,893 வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்கலாம் | மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு

வயது வரம்பு:  28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : துறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.csircmc.res.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2022

மேலும் விபரங்கள் அறிய www.csircmc.res.in அல்லது https://www.csircmc.res.in/sites/default/files/attachments/Detailed%20Advertisement%20for%20the%20post%20of%20TA%20%26%20TE_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.1 லட்சம் சம்பளத்தில் என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்?

Source: https://www.dinamani.com/employment/2021/dec/25/jobs-notification-csir-madras-complex-apply-for-technical-assistant-post-3761746.html