தமிழகத்தில் இன்று 605 பேருக்கு கொரோனா.. பயமுறுத்தும் சென்னை பாதிப்பு..! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் மேலும் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 ,44,642 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் சுகாதாரதுறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3 கோடியே 48 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

கொரோனா கால கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிப்பு- மத்திய அரசு கொரோனா கால கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிப்பு- மத்திய அரசு

அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட மேலும் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27 ,44,642 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பைவிட சற்றே குறைவாக உள்ளது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 663 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 27,01,336 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.

9 பேர் உயிரிழப்பு

கொரோனா காரனமாக தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும், அரசு மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 171 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 5,61, 513 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனை

இதுவரை 5,70,27,644 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 1,00,927 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம் 16,02,013 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 358 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பெண்கள் பாதிப்பு

பெண்களில் இதுவரை மொத்தம் 11,42,591 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும் 247 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
A further 605 people in Tamil Nadu have been diagnosed with coronavirus and the number has risen to 27,44,642, according to a statement issued by the state health department today.

Source: https://tamil.oneindia.com/news/chennai/corona-infection-has-been-confirmed-in-605-people-in-tamil-nadu-today-443472.html