ஒமைக்ரானால் மீண்டும் ஊரடங்குக்கு வாய்ப்பு… மோசமாகும் சென்னை நிலவரம்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
  • கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்
  • அனைவரும் கட்டாயம் முகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னை அசோக் நகர் காலனியில் ஒரே தெருவை சேர்ந்த 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் சுகாதரத்துறைஅமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடிஉள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், மஹாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று ஓரிரு நாளிலேயே அதிகரித்து வருகிறது. சென்னையிலும் தொற்று பாதிப்பு கூடி கொண்டே இருக்கிறது என்றார்.

சென்னையில் இந்த ஒரே தெருவில் 10க்கும் மேற்பட்டவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறிய அமைச்சர், இந்த தெருவை சேர்ந்த ஒருவர், ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒருவரை சந்தித்து வந்துள்ளார். அவருக்கு பின் அடுத்தடுத்த தொற்று ஏற்பட்டுள்ளதால், இது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது.
புத்தாண்டு 2022: சென்னையில் அதிரடி கட்டுப்பாடுகள்!மேலும் சென்னையில் நேற்று 194 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று 200க்கும் அதிகமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய மா.சு வரும் ஞாயிற்றுக்கிழமை 17வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர் சென்னை மக்களுக்கு ஒரு வேண்டுகோள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக, சென்னையில் 3 இடங்களில் கொரோனா பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், தண்டையார்பேட்டை, மஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 500 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தை மீண்டும் கொரோனா பாதுகாப்பு மையமாக மாற்றப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை பொறுத்தவரை முதல் தவணை 86%, இரண்டாம் தவணை 58% பேரும் செலுத்தி உள்ளதாகவும், 95 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி உள்ளவர்களாக உள்ளனர். எனவே இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
imageomicron: சென்னை நிலவரம் மோசம்; மீண்டும் ஊரடங்கு?தமிழகத்தில் ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், 129 பேருக்கு எஸ்.ஜீன் டிராப் வந்துள்ளது. இவர்கள் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றார். அதேபோல் ஓமைக்ரான் தொற்று பாதித்தவர்கள் அனைவருமே ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அவர்கள் யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்கிற நிலை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் உப்பட வெளிநாடுகளிலிருந்து வந்த பலருக்கு S வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்டாலும் பெரிய அளவில் அறிகுறிகள் இல்லாத சூழல் நீடிக்கிறது எனக் கூறினார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/covid-cases-regularly-increased-in-chennai-says-minister-ma-subramanian/articleshow/88562679.cms