சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை- கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள காவல்துறை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

மேலும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதால், கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால், பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள்

இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் வருகிற 31.12.2021ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள்
வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதையொட்டி, 31.12.2021 அன்று இரவு ன்னை
பெருநகரில், பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனவும், சென்னை பெருநகரில் அனைத்து மக்களும் புத்தாண்டைக் கொண்டாடும் பட்சத்தில், தற்போதைய கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கொரோனா நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து, மற்றவர்களின் உணர்வுகள் புண்படாத வகையில் கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

கடற்கரைகளுக்கு செல்ல தடை

பொதுமக்கள், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனவும், 31.12.2021 அன்று இரவு 09.00 மணிமுதல் சென்னை பெருநகரில் மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான காமராஜர்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில்
புத்தாண்டு வர்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது , அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் வில்லா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தக்கூடாது எனவும், ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல்
நெறிமுறைகளின்படி இரவு 11.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன எனவும், ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் என கண்காணித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சிகளுக்கு தடை

அனைத்து ஓட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும், பொது இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், DJ, இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை என கூறியுள்ள சென்னை பெருநகர காவல்துறை, கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட அனைத்து
வழிபாட்டுதலங்களிலும், சம்பந்தப்பட்ட நிர்வாகி அதிகாரிகள், தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க வேண்டும் எனவும், அங்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி, அனைத்து நுழைவு வாயில்களிலும் மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பைக் ரேஸ் எச்சரிக்கை

31.12.2021 அன்று இரவு முக்கிய இடங்களில் சென்னை பெருநகர காவல் துறையினர் சார்பில் வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து, பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணித்தும், அனைத்து முக்கிய இடங்களில் ரோந்து செல்வார்கள் எனவும், கன்னியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களிலும் ஈடுபடுவோர், பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வானங்களை இயக்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், பொது மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு களியாட்டங்களில் ஈடுபட்டு தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்த்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Chennai Police has imposed restrictions on New Year celebrations in Chennai due to the spread of the Corona and Omicron virus.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-has-imposed-restrictions-on-new-year-celebrations-in-chennai-443575.html