என்ன ஆகும் சென்னை… அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும்…! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், அமைந்தகரை, கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை தலைமைச்செயலகத்திற்குள் மழை நீர் புகுந்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் திடீர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/12/30171524/Heavy-Rain-will-Continue-next-2-Hours-in-Chennai.vpf