சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்று காலையில் இருந்து நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒன்றிரண்டு இடங்களில் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திண்டுக்கல், புதுச்சேரி காரைக்கால், விழுப்புரம், கடலூர், தஞ்சை, சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/district/2021/12/31163633/3336693/Heavy-rain-next-3-hours-chennai-included-18-districts.vpf