புத்தாண்டு கொண்டாட்டம்: வெறிச்சோடியது சென்னை – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை: ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டதால், சென்னை மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை மாநகரில் இன்றிரவு ரிசார்ட்கள், கிளப்புகள், கேளிக்கை விடுதிகள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பண்ணை வீடுகள், இசை நிகழ்ச்சி போன்ற இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல் துறை தடை விதித்துள்ளது.
கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக மெரினா கடற்கரை, எலியட்ஸ், பெசன்ட் நகர் கடற்கரைகளில் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. பைக் ரேஸ் நடத்தினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

முக்கிய மேம்பாலங்கள், சாலைகளில் போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். சென்னையில் 13,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது.

Advertisement

Dinamalar iPaper

கோவிட் பரவல் தீவிரம்: மாநிலங்களுக்கு புது உத்தரவு


கோவிட் பரவல் தீவிரம்: மாநிலங்களுக்கு புது உத்தரவு

முந்தய

குப்பை அள்ளும் ஒப்பந்ததாரர் ஜனவரி 1ல் போராட்ட அறிவிப்பு


குப்பை அள்ளும் ஒப்பந்ததாரர் ஜனவரி 1ல் போராட்ட அறிவிப்பு

அடுத்து
வாசகர் கருத்துSource: https://www.dinamalar.com/news_detail.asp?id=2926836