பரபரப்பில் சென்னை.. திடீர் திடீரென கடைகளில் ஆய்வு.. மாஸ்க் அணியாதவர்களை பிடிக்க.. போலீஸ் படை தீவிரம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகரில் நோய் தடுப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.. இந்த குழுவினர் பொது இடங்களில் கண்காணித்து மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்..

அமெரிக்கா, இங்கிலாந்து என்று பல நாடுகளில் ஒமிக்ரான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் தொற்று ஏற்படலாம் என்று நிபுணர்கள் ஏற்கனவே வார்னிங் தந்துள்ளனர்.

எனினும், மக்கள் அளவுக்கு அதிகமாக பயந்துவிடக்கூடாது என்பதற்காக, ஒமிக்ரானால் பாதிப்பு இல்லை பயப்பட வேண்டாம் என்று சொல்லவும், இதை அசால்ட்டாக எடுத்து கொள்கின்றனர்.

அடுத்தடுத்து 23 மருத்துவர்களுக்கு கொரோனா.. கடும் அழுத்தத்தில் சுகாதார கட்டமைப்பு? ஓமிக்ரான் பாதிப்பா அடுத்தடுத்து 23 மருத்துவர்களுக்கு கொரோனா.. கடும் அழுத்தத்தில் சுகாதார கட்டமைப்பு? ஓமிக்ரான் பாதிப்பா

ஒமிக்ரான்

ஒமிக்ரான் மிக வேகமாக பரவும்.. ஆனால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஒமிக்ரான் தொற்றால் உயிரிழப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதேசமயம், ஒமிக்ரான் பரவலைத் துணி மாஸ்க் தடுக்காது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.. மூக்கு மற்றும் வாய்ப் பகுதியை நன்கு மறைக்கும் வகையில், அதிக பாதுகாப்பு கொண்ட என்95 மாஸ்க் அணிவது நல்லது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

சர்ஜிக்கல்

அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சர்ஜிக்கல் மாஸ்கை அணிந்துகொள்ளலாம், மருத்துவ பணியாளர்கள் கட்டாயம் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்ஜிக்கல் அல்லது எண்95 மாஸ்குகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் நாம் அணியும் மாஸ்க்கினால் மூக்கு மற்றும் வாயை முழுமையாக மறைக்க வேண்டும். வேறு எந்த ஒரு பகுதியிலிருந்தும் காற்று நம் மூக்கு, வாய்ப் பகுதிக்கு வரவே கூடாது… முழுக்க முழுக்க மாஸ்க் வழியாகவே நாம் சுவாசிக்க வேண்டும்…

தொடக்கூடாது

அப்படி இருந்தால்தான் மிகப்பெரிய அளவில் ஒமிக்ரான் பரவலைத் தவிர்க்க முடியும்…ஆனால் இதை பரவலாக யாருமே கடைப்பிடிப்பதில்லை… மாஸ்க் பகுதியை நேரடியாக கைகளால் தொடக்கூடாது என்கிறார்கள், மாஸ்க்கின் கயிறு பகுதியை மட்டுமே தொட வேண்டுமாம்.. அப்படியும் நாம் செய்வதில்லை.

பயன்பாடுகள்

மாஸ்க் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், மீண்டும் மீண்டும் ஒரே மாஸ்க்கை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள்.. அதையும் நாம் செய்வதில்லை. மாஸ்க்கை கழற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்தியதும், கைகளை கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்துகொள்ள வேண்டுமாம்.. அதையும் நாம் செய்வதில்லை.. யாரிடமாவது பேசினால், மாஸ்க்கை இறக்கி விட்டு பேசுகிறோம்.. இதுவும் தவறான செயல்தான்.. கொரோனாவில் இருந்து தப்ப மாஸ்க்கை சரியாக அணியாத நிலையில், பரவல் தற்போது தமிழகத்தில் அதிகரித்து காணப்படுகிறது..

மாநகராட்சி

அதனால், சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் கொரோனா அச்சமின்றி மாஸ்க் அணியாமல் சுற்றித்திரியும் பொதுமக்கள், சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை… இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போலீசார் மாநகராட்சியுடன் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.. இதற்காகவே சென்னை மாநகர் நோய் தடுப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன..

வணிக வளாகங்கள்

இந்த குழுவினர் பொது இடங்களில் கண்காணித்து மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதற்காகவே சென்னையில் போலீஸ் படை களம் இறங்கியுள்ளது. வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கியுள்ளனர். கடைகளில் திடீரென புகுந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.. அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் இருந்தால் கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

English summary
Coronavirus increases in Chennai and Intensity of the police force to catch the rules breakers

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-increases-in-chennai-and-intensity-of-the-police-force-to-catch-the-rules-breakers-444227.html