சென்னையில் கொரோனா கோரத்தாண்டவம்.. எச்சரிக்கை மணி அடிக்கும் விஜயானந்த்தின் டேட்டா.. நீங்களே பாருங்க – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிவேகமாக சென்று வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது 1700-ஐ கடந்து விட்டது. ஓமிக்ரான் வைரஸ் வந்த பிறகு தமிழகத்தில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஜனவரி மாத ராசி பலன் 2022 : இந்த 4 ராசிக்காரர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதுஜனவரி மாத ராசி பலன் 2022 : இந்த 4 ராசிக்காரர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

அதுவும் தலைநகர் சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது. அதாவது தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 50%-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன.

சென்னையில் கொரோனா அதிகரிப்பு

கொரோனா இரண்டாவது அலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்தது. பாதிப்பில் முதலிடத்தில் இருந்த சென்னை, கோவையை முன்னுக்கு தள்ளி விட்டு பின்னால் சென்று சாதித்து காட்டியது. இப்படி கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்த சென்னையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது.

விஜயானந்த்தின் டேட்டாவை பாருங்க

தினம்தோறும் பாதிப்பு அதிகரித்து தற்போது 876 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் சென்னையின் நிலை மிக மோசமாக உள்ளது. சென்னையில் எப்படி கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது? சென்னையின் தற்போதைய நிலையை வரைபடம் மூலம் தெளிவாக விளக்கி சென்னைவாசிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார் கோவிட் டேட்டா ஆய்வாளர்(அனலிட்டிக்ஸ்) விஜயானந்த். அதாவது சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதிக்கும், 20-ம் தேதிக்கும் இடையில் ஆக்டிவ் கேஸ்கள் 1000 மற்றும் 1500-க்கு இடையில் இருந்த நிலையில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்புகின்றன

சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதையும் தெளிவாக எச்சரிக்கையுடன் உணர்த்தியுள்ளார் மருத்துவமனையின் சாதாரண படுக்கைகள் டிசம்பர் மாதம் 18-ம் தேதிக்கும், 20-ம் தேதிக்கும் இடையில் மிக குறைவாக தேவைப்பட்ட நிலையில் தற்போது 500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தேவையாக உள்ளது. இதேபோல் மருத்துவமனையின் ஆக்சிஜன் படுக்கைகளும் டிசம்பர் மாத நடுப்பகுதியை ஒப்பிடும்போது தற்போது 700-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தேவை என்ற நிலை உள்ளதாக கூறியுள்ளார்.

சென்னைவாசிகளின் அலட்சியம்

இதில் ஆறுதல்படக்கூடிய ஒரே விஷயம் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு(ஐசியூ) படுக்கையில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதுதான். இந்த டேட்டாவை வைத்தே சென்னையின் மோசமான நிலையை நாம் புரிந்து கொள்ளலாம். சென்னையில் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாததுதான் கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

English summary
The incidence of corona in Chennai is doubling daily. That is, Chennai alone accounts for more than 50% of the total impact of Tamil Nadu. covid 19 Data Analyst Vijayanand has sounded the alarm bell for the people of Chennai by clearly explaining the current situation in Chennai through a map

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-alone-more-than-50-of-the-total-covid-19-cases-in-tamilnadu-444206.html