MIT: சென்னை எம்.ஐ.டி.யில் 46 மாணவர்களுக்கு கொரோனா.. இழுத்து மூடப்பட்டது கல்லூரி வளாகம்..! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. 1,417 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்ததில் 46 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது, பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் திடீரென வேகம் எடுத்து வருகிறது… நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் 1,489 ஆக தொற்று பாதிப்பு எண்ணிக்கை இருந்தது..

அதாவது, ஒரேநாளில் டவுள் மடங்காக தொற்றுபரவி வருகிறது.. இதனால், தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது…

அவசர ஆலோசனை! தமிழ்நாட்டில் தீவிர லாக்டவுனா? மீண்டும் மீட்டிங் போட்ட முதல்வர் ஸ்டாலின்.. ஏன்?அவசர ஆலோசனை! தமிழ்நாட்டில் தீவிர லாக்டவுனா? மீண்டும் மீட்டிங் போட்ட முதல்வர் ஸ்டாலின்.. ஏன்?

மருத்துவ குழுவினர்

முக்கியமாக 22 இடங்களில் முதல்கட்ட உடற்பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை வழங்கும் பணி தொடங்கி உள்ளது… அதேபோல, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு மருத்துவ குழுவினர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இதேபோல அவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வ ஊழியர்களும் 1000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாடுகள்

தன்னார்வலர்கள் வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனையையும் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்று வீடு வீடாக கேட்டு வருகிறார்கள்… எனினும், கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை சில புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.. எனவே, தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.

மாணவர்கள்

இப்படிப்பட்ட சூழலில், முக்கிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி எனப்படும் எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 1,417 மாணவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. இதில், 46 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது… மேலும் பல மாணவர்களின் டெஸ்ட்கள் இன்னும் வரவில்லை… ஆனாலும், அங்கு மேலும் கொரோனா கேஸ்கள் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. இது அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

செங்கல்பட்டு

இதன்காரணமாக, ஒரு வார காலத்துக்கு கல்லூரி வளாகத்தை மூடுவதற்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.. சென்னையை சுற்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுர மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டிருந்த ஒரு செய்திக்குறிப்பில் தமிழகத்தில் மொத்தம் 14 மாவட்டங்களில் தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறியிருந்தது.. அதில், செங்கல்பட்டு மாவட்டமும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus for 46 students at Chennai MIT and Campus closed for a week

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-for-46-students-at-chennai-mit-and-campus-closed-for-a-week-444369.html