பணியமர்த்தல் நடவடிக்கை.. சென்னை, கோயம்புத்தூரில் இவ்வளவு தான் வளர்ச்சி..! – Goodreturns Tamil

சென்னைச் செய்திகள்
For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

கடந்த ஆண்டில் கொரோனா, டெல்டா வைரஸ் என மக்களை படாய்படுத்தி வந்த வைரஸ்கள் இருந்தாலும், வளர்ச்சி விகிதமானது நன்றாக இருந்தது எனலாம். ஆரம்பத்தில் சற்றே தடுமாற்றத்தில் இருந்தாலும், வருட பிற்பாதியில் நல்ல வளர்ச்சியானது இருந்தது. குறிப்பாக பல துறைகளிலும் வளர்ச்சி விகிதமானது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டின.

இதற்கிடையில் தான் பல துறைகளிலும் பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இது குறித்த மாத மாதம் வெளியிடப்படும் நாக்குரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ் குறியீடானது (டிசம்பர் மாதம்) வெளியாகியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி 9.2% ஆக இருக்கலாம்..!

விழாக்காலம்

விழாக்காலம்

இது குறித்து வெளியான இன்டெக்ஸில், கடந்த டிசம்பர் மாதம் டிராவல் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் பணியமர்த்தல் வளர்ச்சி விகிதமானது 22% வளர்ச்சி கண்டுள்ளது. சில்லறை வர்த்தக துறையில் 20% வளர்ச்சியும், கல்வித் துறையில் 12% வளர்ச்சியும் கண்டுள்ளது. கடந்த மாதத்தில் விழாக்காலம் என்பதால் தேவையானது மீண்டிருந்த நிலையில், இந்த வளர்ச்சி விகிதமானது கண்டுள்ளது.

மகிழ்ச்சியளிக்கிறது

மகிழ்ச்சியளிக்கிறது

இது குறித்து நாக்குரியின் தலைமை வணிக அதிகாரியான பவன் கோயல், ஐடி துறையானது எப்போதும்போல பணியமர்த்தல் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. ஆனால் மந்த நிலையில் இருந்த ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் டிராவல் மற்றும் சில்லறை வர்த்தகம், ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி விகிதமானது மீண்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா, ஓமிக்ரான் என பல காரணங்களுக்கு மத்தியில் டிஜிட்டல் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் இந்த துறைகளில் வளர்ச்சி விகிதமானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எனினும் தற்போது அதிகரித்து வரும் ஒமிக்ரான் மத்தியில் சில துறைகளில் வளர்ச்சி விகிதமானது சரியலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது.

பெரு நகர வாரியாக வளர்ச்சி

பெரு நகர வாரியாக வளர்ச்சி

இந்த வளர்ச்சி விகிதங்களை நகர வாரியாக பார்க்கும்போது ஹைத்ராபாத்தில் 12% வளர்ச்சியும், பெங்களூரில் 11% வளர்ச்சியும், மும்பையில் 8% வளர்ச்சியும், புனேவில் 4%மும், சென்னையில் 6% வளர்ச்சி விகிதமும் கண்டுள்ளது. எனினும் டெல்லியில் எந்த வளர்ச்சியும் காணவில்லை.

எந்தெந்த துறையில் சரிவு?

எந்தெந்த துறையில் சரிவு?

வேகமாக நுகரும் FMCG துறையில் முந்தைய ஆண்டினை காட்டிலும் -12 சதவீதம் பணியமர்த்தல் சரிவினைக் கண்டுள்ளது.

அதேபோல அவுட்சோர்சிங் பணிகள் மூலம் பணியமர்த்தப்படும் பணியமர்த்தலும் -14% சரிவினைக் கண்டுள்ளது.

அடுத்ததாக இன்சூரன்ஸ் துறையில் மிக மோசமாக -19% வீழ்ச்சி கண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

hiring activities in December 2021:Naukri JobSpeak Index

hiring activities in December 2021:Naukri JobSpeak Index/பணியமர்த்தல் நடவடிக்கை.. சென்னை, கோயம்புத்தூரில் இவ்வளவு தான் வளர்ச்சி..!

Story first published: Friday, January 7, 2022, 19:31 [IST]

Source: https://tamil.goodreturns.in/news/hiring-activities-in-december-2021-naukri-jobspeak-index-026373.html