7 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் வெளியாகும் ‘மெட்ராஸ்’ – Dinamalar

சென்னைச் செய்திகள்

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். அறிமுகப்படமே அவரைப் பற்றிப் பேச வைத்தாலும் அடுத்து இரண்டாவதாக அவர் இயக்கிய ‘மெட்ராஸ்’ படம் அதிகம் பேசப்பட்ட படமாக அமைந்தது.

கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்த அந்தப் படம் தமிழில் 2014ம் ஆண்டு வெளிவந்து. நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. அப்படத்தை ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்போது தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த ஜனவரி மாதம் 13ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். படத்திற்கு ‘நா பேரு சிவா 2’ என வைத்துள்ளார்கள்.

இதற்கு முன்பு கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தை 2010ம் ஆண்டில் ‘நா பேரு சிவா’ என தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அப்போது அந்தப் படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், அதே பெயரில் ‘2’ என சேர்த்து இரண்டாம் பாகம் போல ‘நா பேரு சிவா 2’ என ‘மெட்ராஸ்’ தெலுங்கு டப்பிங் படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்கள்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement

Source: https://m.dinamalar.com/cinema_detail.php?id=102033