2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் 3வது அலை பரவல் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 10,00-ஐ நெருங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Also read… வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு

அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் அரசு, தனியார் பேருந்துகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சென்னை புறநகர் மின்சாரா ரயில்கள் குறைந்தளவு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

அதேபோல், மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பிரிவு அறிவித்துள்ளது. மேலும், புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் சுற்றினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் புறநகர் ரயிலில் செல்பவர்கள் வருகிற 31-ம் தேதி வரை UTS செயலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Also read: சென்னையில் நாளை குறைந்த அளவில் மட்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே!

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-only-passengers-with-two-doses-of-vaccination-allowed-for-suburban-train-travel-ekr-660383.html