சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 பேருக்கு கொரோனா – தந்தி டிவி

சென்னைச் செய்திகள்

சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கல்லூரியில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து,

352 பேருக்கு நடைபெற்ற கொரோனா பரிசோதனை முடிவுகள்  மாலை வந்தன. இதில் 26 மாணவர்கள் நான்கு ஊழியர்கள் உட்பட 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதேபோல குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2022/01/09020037/3019490/Corona-for-30-more-at-Chennai-Christian-College.vpf.vpf