மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தினகரன்

சென்னைச் செய்திகள்

தாம்பரம்: தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் ஏற்கனவே,  22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில்,  மேலும் 352 பேருக்கு நடந்த கொரோனா பரிசோதனை முடிவு நேற்று மாலை வந்தது. அதில் 26 மாணவர்கள், 4 ஊழியர்கள் உட்பட 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே, கல்லூரி விடுதி மூடப்பட்டு மாணவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என, தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் துணி கடை மூடப்பட்டது.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733804