ஸ்பெஷல் லாக்டவுனை நோக்கி சென்னை? ஒரே நாளில் மிகப்பெரிய கொரோனா சர்ஜ்.. இதை நோட் பண்ணீங்களா!? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில் சென்னையில் கேஸ்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் வருமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா கேஸ்கள் மீண்டும் 5 இலக்கத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 10,978 கொரோனா கேஸ்கள் பதிவானது.

ஷாக் அடிக்கும் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் அச்சமூட்டும் பாசிட்டிவ் விகிதம்!ஷாக் அடிக்கும் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் அச்சமூட்டும் பாசிட்டிவ் விகிதம்!

தமிழ்நாட்டில் புதிய கேஸ்களின் அளவு 22 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்கள் 40,260 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 20,269 ஆக்டிவ் கேஸ்கள் இப்போது உள்ளது.

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாட்டில் இதுவரை 36843 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் என்னதான் கேஸ்கள் உயர்ந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை 27.8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1.3 சதவிகிதம் பேர்தான் மரணம் அடைந்துள்ளனர். 10,978 கேஸ்கள் நேற்று தமிழ்நாட்டில் பதிவான நிலையில் 10,932 கேஸ்கள் லோக்கல் கேஸ்கள் ஆகும். 5 கேஸ்கள் வங்கதேசத்தில் இருந்து வந்த கேஸ்கள்.

தமிழ்நாடு ஓமிக்ரான்

இலங்கை, அமீரகத்தில் இருந்து விமானம் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கேஸ்கள் இப்படி உச்சம் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களில் தினசரி கேஸ்கள் 4 மடங்கு உயர்ந்து உள்ளது. ஜனவரி 3ம் தேதி தமிழ்நாட்டில் 10364 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இப்போது 40,260 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னை ஓமிக்ரான்

சென்னையில் 5 நாட்களுக்கு முன் 4,259 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இப்போது 20,369 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் 2324 ஆக்டிவ் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிட்டால் சென்னையில்தான் மிகப்பெரிய அளவில் கேஸ்கள் உயர்ந்து உள்ளது.

சென்னை கொரோனா கேஸ்கள்

இதில் சென்னையில் மட்டும் 5,098 கேஸ்கள் நேற்று பதிவாகி உள்ளது. அதாவது மாநிலத்தில் மொத்த கேஸ்களில் 46 சதவிகித கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையில் இதன் மூலம் புதிய அலை ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது. சென்னையில் வரும் நாட்களில் மேலும் கேஸ்கள் ஏற்படும் என்ற அச்சத்தை இது ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லாக்டவுன் தமிழ்நாடு

கேஸ்கள் உயர்ந்து வருவதால் சென்னையில் மட்டும் தனியாக ஸ்பெஷல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அங்கு மட்டும் கேஸ்கள் உயர்வதால் கூடுதலாக லாக்டவுன் விதிகள், மாலை நேர கட்டுப்பாடு, தியேட்டர்கள் மூடப்படுவது போன்ற விதிகள் கொண்டு வரப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தலைமை செயலக வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்ததில், தமிழ்நாட்டில் முழு லாக்டவுன் போடும் எண்ணம் இல்லை.

சென்னை லாக்டவுன்

சென்னையிலும் முழு லாக்டவுன் போடும் எண்ணம் இல்லை. ஆனால் கேஸ்கள் இப்படியே உயர்ந்தால் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் கட்டுப்பாடுகள் வரும் வாய்ப்புகள் உள்ளன. பொங்கலுக்கு பின் சில சில கட்டுப்பாடுகள் வரலாம். கேஸ்கள் உயர்வதை மக்கள் நோட் செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறோம். என்ன கட்டுப்பாடு விதித்தாலும் மக்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்கள்தான் வெளியே செல்வதை குறைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அந்த தலைமை செயலக வட்டாரம் நம்மிடம் தெரிவித்தது.

English summary
Is Chennai facing a special lockdown as cases are surging in the Tamilnadu capital city?

Source: https://tamil.oneindia.com/news/chennai/is-chennai-facing-a-special-lockdown-as-cases-are-surging-in-the-tamilnadu-capital-444812.html