சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க போறீங்களா?.. மறக்காம இதை கொண்டு போங்க.. இல்ல ரூ.500 தண்டம் கட்டணும் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 11,000-ஐ கடந்து விட்டது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் உச்சத்தை தொட்டுள்ளது.

உலகில் கொரோனாவால் 30.78 கோடி பேர் பாதிப்பு - ரஷ்யாவில் 1 கோடியை தாண்டிய மொத்த கேஸ்கள்!உலகில் கொரோனாவால் 30.78 கோடி பேர் பாதிப்பு – ரஷ்யாவில் 1 கோடியை தாண்டிய மொத்த கேஸ்கள்!

தமிழகத்தில் தொடர்ந்து ஆட்டம் போட்டு திரியும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தினமும் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு

தினமும் இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த நிலையில் சென்னை புறநகர் மின்சாரா ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வேயும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. கீழ்க்கணட கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

அதாவது 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் இன்று முதல் பயணிக்க முடியும். புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் சுற்றினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் புறநகர் ரயிலில் செல்பவர்கள் வருகிற 31-ம் தேதி வரை UTS செயலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாஸ்க் இல்லாதவர்களுக்கு அபராதம்

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள், சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில்களில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிந்தபடியே பயணம் செய்து வருகின்றனர். மாஸ்க் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மாதாந்திர சீசன் டிக்கெட் பெற இது அவசியம்

இதேபோல் சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட் பெற, கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருப்பது அவசியம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது மிக கடுமையான அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறினார்கள்.

English summary
Chennai suburban train will be able to travel from today only if 2 dose vaccination is given. Southern Railway has announced that 2 doses of corona vaccine are required to get monthly season tickets for passengers on Chennai suburban trains

Source: https://tamil.oneindia.com/news/chennai/new-restrictions-on-travel-on-the-chennai-suburban-train-from-today-444908.html