சென்னை, செங்கல்பட்டு ரொம்ப மோசம்.. தயவு செய்து இதை செய்ங்க!.. எச்சரிக்கிறார் Pradeep Kaur! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்பது குறித்து ஐசிஎம்ஆர் தலைமை விஞ்ஞானி ஒரு எச்சரிக்கையான பதிவை செய்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவல் 13,990 ஆக உயர்ந்தது. அதாவது 14 ஆயிரம் கேஸ்களுக்கு 10 குறைவு. ஒரே நாளில் 1,35,266 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அது போல் ஓமிக்ரான் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த ஓமிக்ரான் சமூகபரவலாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஆயிரக்கணக்கில் இருந்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆயிரத்தை தொட்டு 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கடினமான காலத்தை கடக்கிறோம்.. எதிராளியை குற்றம் சொல்ல வேண்டிய நேரமல்ல.. பிரதீப் கவுர் கடினமான காலத்தை கடக்கிறோம்.. எதிராளியை குற்றம் சொல்ல வேண்டிய நேரமல்ல.. பிரதீப் கவுர்

அதிக வித்தியாசம்

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 6,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11 பேர் பலியாகிவிட்டனர். கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோருக்கும் மீண்டு வெளியே செல்வோருக்கும் இடையே அதிக வித்தியாசம் நிலவுகிறது.

கொரோனா தொற்று

அது போல செங்கல்பட்டில் ஒரு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு 1,696 ஆக உள்ளது. சென்னை , செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் சென்னை, செங்கல்பட்டில் நடைபெறும் அனைத்து கூட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

பிரதீப் கவுர்

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், சென்னையில் கடந்த 6 வாரங்களாக தொற்று பாதிபபு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த இரு மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா பரவல் காணப்படுகிறது. இங்கு டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

3 வாரங்கள்

தடுப்பூசி போடுங்கள்

கடந்த இரு கொரோனா அலைகளின் போது சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பிற மாவட்டங்களை காட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்தே காணப்படுகிறது. எனவே பொது இடங்கலில் முகக் கவசம் அணிவதும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
ICMR Scientist Pradeep Kaur says that Chennai and Chengelput becomes very worst.

Source: https://tamil.oneindia.com/news/chennai/pradeep-kaur-says-that-chennai-and-chengelput-becomes-very-worst-445010.html