தப்பு பண்ணிட்டீங்களே சித்தார்த்.. விசாரணையை தொடங்கிய சென்னை போலீசார்.. பிடி இறுகுகிறதா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசக் கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்ததாக வழங்கப்பட்ட நோட்டீஸ் குறித்து சென்னை காவல்துறை விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பெரோஸ்பூர் நகருக்குச் சென்றார் அப்போது விவசாயிகளின் போராட்டத்தால் அவரது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது.

20 நிமிட காத்திருப்புக்குப் பிறகு பிரதமர் மோடி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் இதற்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுப்பப்பட்டது.

கைது செய்த விதம் சரியில்லை.. ராஜேந்திர பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து.. காரசார வாதம்!கைது செய்த விதம் சரியில்லை.. ராஜேந்திர பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து.. காரசார வாதம்!

சாய்னா நேவால் கருத்து

இந்த சம்பவம் குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது எனவும் பஞ்சாபில் பிரதமர் மோடி மீது நடந்த கோழைத்தனமான தாக்குதலை வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன் என கருத்து தெரிவித்து இருந்தார்.

சிக்கிய சித்தார்த்

சாய்னாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவிட்த்ஹ நடிகர் சித்தார்த், சில ஆபாச வார்த்தைகளோடு டிவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்ததாகவும், சித்தார்த்தின் சாய்னா தொடர்பான பதிவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து நடிகர்கள் பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் நடிகர் சித்தார்த்தை வெளுத்து வாங்கி வந்தனர். தனது செயலுக்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்பதாகவும் நீங்கள்தான் உண்மையான சாம்பியன் என்றும் கூறியிருந்தார். இதற்கு சாய்னாவும் பதிலளித்திருந்தார். எவ்வாறு பதிலளித்திருந்தார்.

மகளிர் ஆணையம் நோட்டீஸ்

இந்நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆபாச வார்த்தைகளால் விமர்சித்த நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. இதேபோல பெண் ஊடகவியலாளர் ஒருவரை விமர்சித்தது குறித்தும் மீண்டும் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் குறித்து விசாரணை நடத்த சென்னை காவல் துறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

சென்னை காவல்துறை விசாரணை

இதையடுத்து சட்ட நிபுணர்களுடன் சென்னை போலீசார் ஆலோசனை நடத்தினார். இந்த விசாரணையின்போது நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் பதிவுகள் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. நிபுணர்கள் வழங்கும் ஆலோசனை அடிப்படையில் இந்த வழக்கை சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றி அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ள நிலையில், நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் நடிகர் சித்தார்த்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன..

English summary
Chennai Police have launched an investigation into a notice issued by the National Commission for Women (NCW) seeking action against actor Siddharth for making obscene remarks about badminton player Saina Nehwal on Twitter.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-are-investigating-a-notice-seeking-action-against-actor-siddharth-445194.html