போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம்.. சென்னை மாநகராட்சி வார்னிங்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: போகி பண்டிகை அன்று சென்னையில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுவித்துள்ளது. இந்த ஆண்டுதான் முதன் முறையாக அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குக்கிராமத்தில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என களைகட்டும். பொங்கல் திருநாளின் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படும்.

அமீர் தனக்கு விட்டு தரவில்லை.. அன்று நடந்த கதையே வேறு.. தாமரையின் கருத்துஅமீர் தனக்கு விட்டு தரவில்லை.. அன்று நடந்த கதையே வேறு.. தாமரையின் கருத்து

போகி பண்டிகை

போகி பண்டிகை ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ என்று காலம்காலமாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த நாளில் பழையவற்றையும், தேவை இல்லாததையும் தூக்கி எறிவது மக்களின் வழக்கம். சூரிய நாட்காட்டியின் படி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரூ.1,000 அபராதம்

பழையவற்றையும், தேவை இல்லாததையும் மக்கள் தீ வைத்து எரிப்பார்கள். டயர், பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரிப்பார்கள். இந்த நிலையில் போகி பண்டிகையான நாளை(ஜன.13) சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக், டயர்கள் போன்ற பொருள்களை எரித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகாரிளுக்கு உத்தரவு

இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து மண்டலங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும் சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர்களை எரிக்க கூடாது என்று மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்.

சுற்றுச்சூழல் மாசுபாடு

ஆனால் இந்த ஆண்டு எச்சரிக்கையுடன் சேர்த்து அபராதமும் முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகத்தான் தீபவாளி பண்டிகையின்போது நேரக் கட்டுப்பாடுகளுடன் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டே சென்னை மாநகராட்சி இந்த முறை மிக கடுமையான எச்சரிக்கையை வழங்கி உள்ளது.

English summary
The Chennai corporation has issued a warning that a fine of Rs.1,000 will be levied for burning tires and plastic items in Chennai on the occasion of pogi pandigai This is the first time a fine has been imposed this year

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-has-warning-that-a-fine-of-rs-1-000-will-be-levied-for-burning-plastic-items-445224.html