ஐஎஸ்எல்: சென்னை – ஹைதராபாத் ஆட்டம் டிரா – தினமணி

சென்னைச் செய்திகள்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி – ஹைதராபாத் எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய 59-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் சென்னைக்காக சஜித் 13-ஆவது நிமிஷத்திலும், பின்னா் ஹைதராபாதுக்காக சிவெரியோ 45-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். சென்னை 3-ஆவது முறையாக டிரா செய்துள்ள நிலையில், ஹைதராபாதுக்கு 5-ஆவது ஆட்டம் டிரா ஆகியுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது ஹைதராபாத் 11 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் பெற்று 3-ஆவது இடத்தில் உள்ளது. சென்னையும் அதே ஆட்டங்களில் அதே வெற்றிகளுடன் 15 புள்ளிகள் பெற்று 6-ஆவது இடத்தில் இருக்கிறது.

Source: https://www.dinamani.com/sports/sports-news/2022/jan/14/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-3773843.html