சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள் கட்ட அனுமதி – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து, 335 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகர் 1வது பிரதான சாலையில் ஒரு மேம்பாலமும் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பு – ஸ்ட்ரான்ஸ் சாலையில் 2வது மேம்பாலமும் கணேசபுரத்தில் தற்போதுள்ள சுரங்கப்பாதைக்கு பதிலாக மூன்றாவது மேம்பாலம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து, 335 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புதியதாக 3 மேம்பாலங்கள் கட்டப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் மேம்பாலம், தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலும், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் ஸ்ட்ரான்ஸ் சாலை சந்திப்பில் 2வது மேம்பாலமும் கணேசபுரத்தில் தற்போதுள்ள சுரங்கப்பாதைக்கு பதிலாக மூன்றாவது மேம்பாலம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் புதிய மேம்பாலங்களின் வடிவமைப்புகளுக்கு அனுமதி அளித்து மாநகராட்சி ஆணையம் தீர்மானம் நிறைவேற்றி நிர்வாக அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பியது.

தற்போதுள்ள கணேசபுரம் சுரங்கப்பாதையில் ஒருபுறம் நடைபாதையுடன் இருவழிப்பாதை பிரிக்கப்படாத இருவழிப்பாதை உள்ளது. புதிய மேம்பாலம் 142 கோடி ரூபாய் செலவில் 680 மீட்டருக்கு நான்கு வழிச்சாலையுடன் கட்டப்படும். “சுரங்கப்பாதையில் 4 ரயில் பாதைகள் உள்ளன. டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் புளியந்தோப்பு ஹைரோட்டில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வரை நான்கு வழிப்பாதை பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்டீபன்சன் லேன் சுரங்கப்பாதைக்கு வடக்கே சுமார் 20 மீ தொலைவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் தொடங்கி மூன்று வழி சந்திப்பை உருவாக்குகிறது. இந்த சாலைக்கும் சுரங்கப்பாதைக்கும் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது’ என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓட்டேரி சந்திப்பில், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் ஸ்ட்ரான்ஸ் சாலையை இணைக்கும் இருவழி மேம்பாலம் கட்டப்படும். தெற்கு உஸ்மான் சாலையில் மேம்பாலம் இருந்தாலும், தெற்கு உஸ்மான் சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் சாய்வுப் பகுதியை இணைக்கும் வகையில் சிஐடி நகர் 1 மற்றும் 4வது பிரதான சாலை சந்திப்புகளுக்கு மேலே செல்லும் வகையில் புதிய மேம்பாலம் கட்டமைப்பை மாநகராட்சி நிர்வாகம் வடிவமைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-approves-three-new-flyovers-in-chennai-397369/