சென்னையில் 2,454 தெருக்களில் கோவிட் – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னையில் 2,454 தெருக்களில் கோவிட் பாதிப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மொத்தம் உள்ள 39,537 தெருக்களில் 1,591 தெருக்களில் 3 – 5 என்ற எண்ணிக்கையில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். 583 தெருக்களில் 6-10 பேரும், 280 தெருக்களில் 10- 25 பேரும் உள்ளனர். ஒரு தெருவில் கூட 25க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் பாதிப்புடன் இல்லை. சென்னையில் உள்ள 5 கோவிட் சிகிச்சை மையங்களில் 363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால், நேற்று ஒரே நாளில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.22,600ம், சென்னை போலீசார் ரூ.10,02,900 ம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுவரை சென்னையில் மட்டும் ரூ.7,78,96,395 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 73 சதவீதம் பேர் 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். 15 முதல் 17 வயதுள்ள சிறார்களில் 66 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Dinamalar iPaper

கோவிட் விதிமீறல்; தமிழகத்தில் ரூ.3.45 கோடி அபராதம் வசூல்


கோவிட் விதிமீறல்; தமிழகத்தில் ரூ.3.45 கோடி அபராதம் வசூல்(2)

முந்தய

அண்ணாதுரை டேபிளில் திருவள்ளுவர் படம்! இணையத்தில் வைரல்


அண்ணாதுரை டேபிளில் திருவள்ளுவர் படம்! இணையத்தில் வைரல்(3)

அடுத்து








வாசகர் கருத்து (1)



Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2938785