வல்லரசு நாடுகளில் உள்ளது போல.. புதுப்பொலிவு பெற போகும் சென்னை ஓஆர்ஆர் பகுதி.. மாஸ்டர் பிளான்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 62 கிமீ தூரம் கொண்ட ஓஆர்ஆர் சாலையில் மிகப்பெரிய “கமர்ஷியல் ஹப்” ஒன்றை அமைக்க அமெரிக்க நிறுவனம் ஒன்று பரிந்துரை செய்துள்ளது. CBRE எனப்படும் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளது.

சென்னையில் ஊரப்பாக்கம் தாண்டி வண்டலூர் வழியாக மீஞ்சூர் வரை 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓஆர்ஆர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்தான் இந்த சாலை மொத்தமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு முழுமையாக வந்தது.

இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்

இந்த சாலை சென்னையில் டிராபிக் பிரச்சனையை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. அவுட்டர் ரிங் ரோட் வந்ததில் இருந்து சென்னையில் காலை, மாலை நேரங்களில் பெரிய அளவில் டிராபிக் குறைந்துள்ளது.

கமர்ஷியல் ரியல் எஸ்டேட்

இந்த நீண்ட ஓஆர்ஆர் சாலை முழுக்க பெரிய நிறுவனங்கள், கடைகள், அரங்குகள், விளையாட்டு மையங்கள், சினிமா அரங்குகள் அமைக்க அமெரிக்காவின் CBRE நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு மாஸ்டர் பிளான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல கமர்ஷியல் ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்த பரிந்துரையில், 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இரண்டு பக்கங்களிலும் பல்வேறு கமர்ஷியல் அமைப்புகள், பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சேவைகளை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. மொத்தமாக 5 விதமான பரிந்துரைகளை இந்த நிறுவனம் செய்துள்ளது.

பரிந்துரைகள் என்ன

அதன்படி முதல் கட்டமாக இங்கு பெரிய அளவில் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என்று CBRE நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாவதாக அகமதாபாத் போன்ற பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட அவுட்டர் ரிங் ரோட் கமர்ஷியல் ஹப் போன்று இங்கும் உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைகளை செய்துள்ளது. இங்கு பல தொழிற் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், உற்பத்தி மையங்களை கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது. மூன்றாவதாக அமெரிக்காவில் ஒரீகான் மாகாணத்தில் CBRE நிறுவனம் கொண்டு வந்த சில திட்டங்களை சென்னை ஓஆர்ஆர் பகுதியிலும் செயல்படுத்த இந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

வல்லரசுகள்

வல்லரசு நாடுகளில் இருக்கும் பெரு நகரங்கள் போல இந்த சாலையை மாற்ற அந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. ஸ்மார்ட் திட்டப்படி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பகுதியை வடிவமைக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி ஒரு ரேஸிங் யுனிட் உருவாக்க வேண்டும். சென்னையில் உருவாக்கப்படும் கார்களை இங்கேயே டெஸ்ட் செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் 40 ஏக்கரில் மிகப்பெரிய அளவிலான மீட்டிங் ஹால்கள், விழா அரங்குகளை உருவாக்க வேண்டும். இந்த அரங்குகளில் சென்னையின் பெரு நிறுவன மீட்டிங்குகளை நடத்த முடியும். அதேபோல் எண்டர்டெயின்மெண்ட் கிளஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

நிறுவனமே எடுத்து செய்யும்

அதாவது இங்கு புதிய மால்கள், ஷாப்பிங் காம்ப்ளஸ்கள் அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை அனைத்தையும் மற்ற சில நிறுவனங்களோடு இணைந்து CBRE நிறுவனமே உருவாக்கும். சென்னை மெட்ராஸ் மோட்டார் கிளப், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு அமைப்பு, தேசிய சாலை அமைப்பு, மாநில சாலை கார்ப்பரேஷன், சென்னை பெருநகர சாலை கார்ப்பரேஷன், சிப்காட், சென்னை மாநகராட்சி அனைத்துடனும் ஆலோசனை செய்து பின் இந்த பரிந்துரை ரிப்போர்ட்டை அந்த நிறுவனம் சமர்ப்பித்து இருக்கிறது.

முன்னேறவில்லை

தற்போது சென்னையில் ஓஆர்ஆர் சாலை பகுதி பெரிய அளவில் முன்னேறவில்லை. இங்கு பெரிய அளவில் நிறுவனங்கள் இல்லை. இங்கு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். புதிய நிறுவனங்களை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் இந்த பகுதி புதிய முன்னேற்றம் அடையும் என்று CBRE கூறியுள்ளது. பிரேசிலில் பரனா, போர்ட்லான்ட், டெல்லியில் சில பகுதிகளை கட்டமைக்க இந்த நிறுவனம் காரணமாக இருந்தது. தற்போது அதே நிறுவனமும் சென்னையில் ஓஆர்ஆர் பகுதியில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளது.

English summary
Chennai ORR road stretch will become a commercial hub soon as proposed by a real estate giant.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-orr-road-stretch-will-become-a-commercial-hub-soon-446535.html