குடியரசு தின கொண்டாட்டம்.. சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை: 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். முன்னதாக சென்னை ராஜாஜி சாலை போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். சென்னை போர்நினைவு சின்னத்தில் முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று குடியரசுத் தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க இன்று 73வது குடியரசுத் தின கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் சென்னையில் மிகப்பெரிய ஏற்பாடுகளுடன் குடியரசுத் தினம் கொண்டாடப்பட உள்ளது.

ஆளுநர் ஆர்என் ரவி கொடி ஏற்றியுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு வீர தீர விருதுகளையும், சாதனைகள் செய்தவர்களுக்கான விருதுகளையும் வழங்குவார். பின்னர் முப்படை வீரர்கள், காவல்துறையினர் அணிவகுப்பு நடக்கும்.

அதன்பின் முதல்வர் ஸ்டாலின் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு வீர தீர விருதுகளையும், சாதனைகளை செய்தவர்களுக்கான விருதுகளையும் வழங்குவார். பின்னர் முப்படை வீரர்கள், காவல்துறையினர் அணிவகுப்பு நடக்கும்.

கொரோனா கட்டுப்பாடு

ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக மிகுந்த கட்டுப்பாடுகளோடு நிகழ்வுகள் நடக்க உள்ளன. மொத்த நிகழ்வும் 30 நிமிடத்தில் நடந்து முடிந்துவிடும். முக்கியமாக பொதுமக்கள் இந்த நிகழ்வுகளை காண அனுமதிக்கப்படவில்லை. எல்லா வருடமும் பொதுமக்களுக்கு இந்த நிகழ்வை பார்வையிட அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் மரியாதை

அதேபோல் முன்னாள் ராணுவ வீரர்கள், சுதந்திர போரட்ட தியாகிகளுக்கு மரியாதை அளிக்கப்படும். ஆனால் இந்த முறை கொரோனா காரணமாக மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்ய உள்ளனர். அதேபோல் கலைநிகழ்ச்சிகளும் இன்று தொலைக்காட்சி மூலமே ஒளிபரப்பப்படும். பொதுவாக குடியரசுத் தினம் முடியும் நாள் மாலை ஆளுநர் மாளிகையில் டீ பார்ட்டி நடத்தப்படும். எம்எல்ஏக்களை அழைத்து ஆளுநர் தே நீர் விருந்து கொடுப்பார்.

விருந்து இல்லை

ஆனால் இந்த முறை கொரோனா காரணமாக இந்த விருந்து நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை டெல்லியில் குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு வாகனங்கள் மாநிலம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. இன்று சென்னையில் 3 வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் எப்போதும் ஒரு வாகனம் காட்சிப்படுத்தப்படும்.

வாகனங்கள்

இது தவிர்த்து மேலும் மூன்று வாகனங்கள் இங்கே இடம்பெறும். முதல்வதாக வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுார் சிப்பாய் கழகம், பூலிதேவன் ஆகியோரின் சிலைகள் அடங்கிய வாகனம் இடம்பெறும். இரண்டாவதாக சுதேசி கப்பல், வ.உ.சிதம்பரனார், ஒண்டிவீரன், சுப்பிரமணிய சிவா, கக்கன், முத்துராமலிங்க தேவர் ஆகியோர் அடங்கிய வாகனம் இடம்பெறும். மூன்றாவதாக பெரியார் தீரன்சின்னமலை, ஜோசப் செல்லதுரை குமரப்பா, வாஞ்சிநாதன் ஆகியோரின் சிலைகள் அடங்கிய வாகனம் இடம்பெறும்.

English summary
73rd Republic Day: Tamilnadu governor RN Ravi to hoist the National flag in Chennai today.

Source: https://tamil.oneindia.com/news/chennai/73rd-republic-day-tamilnadu-governor-rn-ravi-to-hoist-the-flag-in-chennai-today-446590.html