சென்னை வந்துள்ள தோனி! காரணம் இதுதான்! – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னைக்கு வந்துள்ளார்.  கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2021 (IPL 2021) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டு மெகா ஆக்சன் நடைபெறுவதால் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று தோனி சென்னை வந்துள்ளார்.  

ALSO READ | India Squad: குல்தீப் Come Back..! ஓரம்கட்டப்படும் சீனியர் வீரர்?

சிஎஸ்கே அணியின் (CSK Team) கேப்டனாக மட்டுமில்லாமல் அணியில் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் போன்ற முக்கிய முடிவுகளையும் பல ஆண்டுகளாக தோனி எடுத்து வருகிறார். தற்போது வரை சிஎஸ்கே அணி ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட், மொயின் அலி மற்றும் தோனி ஆகிய நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளது. ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கும், தோனி 12 கோடி ரூபாய்க்கும், மொயின் அலி 8 கோடி ரூபாய்க்கும், ருதுராஜ் கைக்வாட் 6 கோடி ரூபாய்க்கும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு ஏலத்தில் 48 கோடி ரூபாய் மீதம் உள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்:
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே): ரவீந்திர ஜடேஜா (16 கோடி), எம்எஸ் தோனி (12 கோடி), மொயீன் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்): ஆண்ட்ரே ரசல் (12 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி)

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ): ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்ட் (6 கோடி)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி): விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி)

டெல்லி கேபிடல்ஸ் (டிசி): ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), பிருத்வி ஷா (7.5 கோடி, பர்ஸில் இருந்து 8 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (6.5 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்): சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி)

பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்): மயங்க் அகர்வால் (12 கோடி, பர்ஸில் இருந்து 14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி)

ALSO READ | “நேருக்கு நேர் பேசுங்கள்” – ஷாகித் அப்ரிடி கருத்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Source: https://zeenews.india.com/tamil/sports/dhoni-in-chennai-here-is-the-reason-380657