சென்னை புத்தக் கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த சென்னை புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை புத்தக் கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த சென்னை புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை புத்தக் கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

45வது சென்னை புத்தக் கண்காட்சி கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு புத்தக் கண்காட்சியைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இதனால், பதிப்பகங்கள் மற்றும் புத்தகங்கள் விற்பனையாளர்களிடம் புத்தகங்கள் தேக்கமடைந்துள்ளதால் புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் பபாசி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 45வது சென்னை புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 16ம் தேதி தொடங்கி மார்ச் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் நடைபெற உள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், கைக் குழந்தைகளுக்கு புத்தக் கண்காட்சியில் அனுமதி இல்லை. கூட்ட நெரிசலைத் தவிரக்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவு டிக்கெட் கொடுக்கலாம். சென்னை புத்தக் கண்காட்சியில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை புத்தக் கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-allows-chennai-book-fair-406240/