சென்னையில் 15 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

சென்னை:

சென்னை மாநகராட்சி தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு நாளன்று பதிவாகும் வாக்குகள் 22-ந்தேதி எண்ணப்பட உள்ளன. இதற்காக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஒவ்வொரு மண்டலங்களிலும் ஒரு வாக்கு எண்ணும் மையம் என 15 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்கள் விவரம் வருமாறு:-

திருவொற்றியூர் 1 முதல் 14 வரையிலான வார்டு வாக்குகள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளையன் செட்டியார் மெட்ரிகுலே‌ஷன் மேல் நிலைப் பள்ளியில் எண்ணப்படுகின்றன.

மணலி- வார்டு 15 முதல் 22 வரை- அரசு மேல்நிலைப் பள்ளி, பாட சாலை தெரு, மணலி.

மாதவரம்- வார்டு 23 முதல் 33 வரை-வேலம்மாள் பொறியியல் கல்லூரி, அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் சாலை, சூரப்பட்டு.

தண்டையார்பேட்டை- வார்டு 34 முதல் 48 வரை -அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆர்.கே. நகர், காமராஜ் சாலை, தண்டையார்பேட்டை.

ராயபுரம்- வார்டு 49 முதல் 63 வரை- பாரதி மகளிர் கல்லூரி பிரகாசம் சாலை, பிராட்வே.

திரு.வி.க.நகர்- வார்டு 64 முதல் 78 வரை- அரசு பாலிடெக்னிக் கல்லூரி (புரசைவாக்கம்) வரதம்மாள் கார்டன், 3-வது தெரு, நம்மாழ்வார்பேட்டை.

அம்பத்தூர்-வார்டு 79 முதல் 93 வரை- தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி கங்கையம்மன் பிரதான சாலை, முகப்பேர் கிழக்கு.

அண்ணாநகர்-வார்டு 94 முதல் 108 வரை- பச்சையப்பன் கல்லூரி, ஈ.வெ.ரா. பெரியார் சாலை.

தேனாம்பேட்டை- வார்டு 109 முதல் 126 வரை- லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம்.

கோடம்பாக்கம் -வார்டு 127 முதல் 142 வரை- மீனாட்சி பொறியியல் கல்லூரி, வேம்புலியம்மன் கோவில் தெரு, விருகம்பாக்கம்.

வளசரவாக்கம்-வார்டு 143 முதல் 155 வரை-எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, மதுரவாயல், (அடை யாளம்பட்டு) பைபாஸ் சர்வீஸ் சாலை.

ஆலந்தூர்-வார்டு 156 முதல் 167 வரை – ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி, எண்.33, பொன்னியம்மன் கோவில் தெரு, எம்.கே.என். சாலை, ஆலந்தூர்.

அடையாறு- வார்டு 168 முதல் 180 வரை- அண்ணா பல்கலைக்கழகம், சர்தார் பட்டேல் சாலை, கிண்டி.

பெருங்குடி-வார்டு 181 முதல் 191 வரை- ஜெருசலம் பொறியியல் கல்லூரி, தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை.

சோழிங்கநல்லூர்-வார்டு 192 முதல் 200 வரை- முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேடவாக்கம் பிரதான சாலை, சோழிங்கநல்லூர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… லஞ்சம்-ஊழலை ஒழிக்க விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்: வீடியோ மூலம் சீமான் பிரசாரம்

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/topnews/2022/02/09152656/3469820/Tamil-News-Counting-centers-at-15-places-in-Chennai.vpf