சென்னை: இன்ஸ்டாகிராம் அறிமுகம்… வீடியோ காட்டி சிறுமியை மிரட்டிய இளைஞர் கைது! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் இளைஞர் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அவர் தன்னுடைய பெயரை கோகுல்ராஜ் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து இருவரும் நட்பாக முதலில் பழகியிருக்கின்றனர். பின்னர் கோகுல்ராஜ் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். அதன்பிறகு கோகுல்ராஜும் சிறுமியும் நேரில் சந்தித்திருக்கின்றனர்.

POCSO சட்டம்!

இந்தநிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகுல்ராஜ் வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று ஆசைவார்த்தைகளைக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோகாவும் எடுத்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமிக்கு கோகுல்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்தபோது அதற்கு சிறுமி மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், நாம் இருவரும் சந்தோஷமாக இருந்தபோது எடுத்த வீடியோவை உன்னுடைய பெற்றோருக்கு அனுப்பி விடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார்.

Source: https://www.vikatan.com/news/crime/youth-arrested-pocso-case-in-chennai-for-cheating-by-showing-private-videos