திமுக வசமாகிறது சென்னை மாநகராட்சி – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

116 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது

சென்னை:

334 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய சென்னை மாநகராட்சியில் உள்ள 

200 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர்.

இந்நிலையில் 134 வார்டுகளில் நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் 116 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக 13 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம்  சென்னை மாநகராட்சி மீண்டும் திமுக வசம் ஆகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. முதல் முறையாக சென்னை மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. தற்போது சென்னை மாநகராட்சி திமுக வசம் வந்துள்ள நிலையில்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி மாநகராட்சியின் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/topnews/2022/02/22151625/3514389/Urban-Local-Government-Election–DMK-gets-Chennai.vpf