கடையில வாங்குற மைதா பாக்கெட் பிடிக்கலையா? வீட்லயே மைதா செய்ய மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி சொல்லி தர்றாங்க! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
மைதா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பரோட்டா தான். அதுமட்டுமில்லை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பலவகையான ஸ்வீட்டுகளும் மைதாவில் தான் செய்யப்படுகின்றன. குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பிஸ்கட்டுகளில் கூட மைதா மாவு தான். கேக்குகள், பீட்சா , பர்கர்கள், நூடுல்ஸ் போன்ற எல்லா உணவுகளையும் மைதா மாவு கொண்டு தான் செய்கிறார்கள். இந்த மைதா மாவை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் உபாதைகள் வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அதிகம் எச்சரித்துள்ளனர். ஆனாலும் மைதா சுவை நம் நாக்குகளை விடுவதாக இல்லை.

கோதுமை மாவை முதலில் பதப்படுத்தி அதன் தவிடு மற்றும் என்டோஸ்பெர்ம் போன்ற பகுதிகளை எல்லாம் நீக்கி தான் மைதா மாவு தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. சீக்கிரமே அதன் சுவையை இழந்து விடும் என்றும் கூறப்படுகிறது. சில சமயங்களில் அவசரத்திற்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடைகளில் வாங்கப்படும் மைதா பாக்கெட்டுகள் நன்றாக இல்லாமலும் போகக்கூடும். அதனால் தான் பிரபல யூடியூப் குக்கிங் சேனலை வழிநடத்தும் ஸ்டெஃபி வீட்டிலயே ஆரோக்கியமாக, இயற்கையாக மைதா எப்படி  செய்வது என்று சொல்லி தருகிறார். வாங்க கற்றுக் கொள்ளலாம்.

ஸ்டெஃபி ரவையை வைத்து மைதாவை தயாரிக்கிறார். எப்படி? என்று இந்த பதிவில் பார்க்கலாம். இதற்கு தேவையான பொருள் 5 கப் ரவை மட்டுமே.

இதையும் படிங்க.. ஒருமுறை இந்த மாதிரி மீன் குழம்பு வச்சி பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க!

1. முதலில் 5 கப் ரவையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கட்டியாக பிசைய வேண்டும்.

2. பின்பு ரவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

3. இப்போது பால் எடுக்கும் வேலை. ஊறிய ரவை கரைசலை நன்கு கரைத்து வட்டி அந்த பாலை மட்டும் எடுக்க வேண்டும்.

4. இப்படியே கரைசலை வட்டி எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அதை வட்டிகட்டி என 5 முறை இதுப்போல் ரவை பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. இப்போது வட்டிகட்டிய பாலை கடைசியாக ஒரு முறை தெளிவாக வடிக்கட்டி அந்த கரைசலை 1 மணி நேரம் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும்.

6. இப்போது தண்ணீர் மேலே வந்து, அடியில் மாவு மட்டும் தங்கி இருக்கும்.

7. இந்த மாவை தட்டில் ஊற்றி வெயிலில் காய வைக்க வேண்டும். வெயிலில் நன்கு காய்ந்த பின்பு அந்த மாவை பொடியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

8. கடைசியாக அரைத்த மாவை ஜலித்தால் மைதா மாவு ரெடி.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/lifestyle/food-maida-recipes-homemade-maida-madras-samayal-youtube-channel-cooking-video-sm-steffi-maida-making-sre-700493.html