சென்னை மாநகராட்சி: காங், அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி பாஜக வேட்பாளர் உமா வெற்றி! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் பா.ஜ.க சார்பில் உமா ஆனந்தன் என்பவர் போட்டியிட்டார். இதே வார்டில் காங்கிரஸ் சார்பாக சுசீலா கோபாலகிருஷ்ணன் என்பவரும், அ.தி.மு.க சார்பாக அனுராதா என்பவரும் போட்டியிட்டனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை தொடங்கியது. இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 134 வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, பா.ஜ.க வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் எட்டு வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்ததாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவந்தன.

இந்த நிலையில் இன்று மாலை, சென்னை மாநகராட்சியின் 134 வார்டில் வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து, பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் 5,539 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உமா ஆனந்தன்

மேலும், உமா ஆனந்தன் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களைவிடவும் 2,036 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், உமா ஆனந்தனின் இந்த வெற்றியே சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க பெற்ற முதல் வெற்றியாகப் பதிவாகியுள்ளது.

Source: https://www.vikatan.com/government-and-politics/election/bjp-candidate-uma-anandhan-won-in-chennai-134-ward